Chennai Today News

போட்றா வெடியை: நவம்பர் 7-ல் கமல்ஹாசனின் புதிய கட்சி

போட்றா வெடியை: நவம்பர் 7-ல் கமல்ஹாசனின் புதிய கட்சி

நடிகர் கமல்ஹாசன் தனது புதிய அரசியல் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை வரும் நவம்பர் 7ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வரும் நவம்பர் 7 என்பது கமல்ஹாசனின் 63வது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக கமல்ஹாசன் இன்று காலை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் அரசியல் கட்சி குறித்து ஆலோசனை செய்தார். ஆலோசனைக்கு பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி அறிவிப்புக்கு பின்னர் கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!