பொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்

தேர்தல் நாளான ஏப்ரல் 18ஆம் தேதி பொன்பரப்பியில் பயங்கர வன்முறை நிகழ்ந்தது என்பதும் இந்த வன்முறை குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பொன்பரப்பி கலவரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: ‘மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்ட பாடல் இதுதான்:

மதங்கொண்டு வந்தது சாதி
இன்றும்
மனிதனைத் துரத்துது மனு
சொன்ன நீதி.
சித்தம் கலங்குது சாமி – இங்கு
ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *