shadow

பொங்கல் பரிசு பணத்தை ஏன் வங்கி மூலம் கொடுக்கவில்லை: தமிழக அரசுக்குக் நீதிபதிகள் கேள்வி

அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில் பொங்கல் பரிசு ரூ.1000ஐ வங்கிக்கணக்கில் செலுத்துவதை விடுத்து 8 முதல் 10 மணிநேரம் காக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொங்கல் பரிசு பணம் கொடுப்பதை ஒழுங்குபடுத்தும் வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘* ஒரு நாளைக்கு ரூ500 சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், அரிசிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காமல் இலவசமாக வழங்குவது ஏன்? என்றும், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இலவசங்கள் வழங்கப்படும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

பொங்கல் பரிசு கிடைக்காவிட்டால் மீண்டும் அரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என பொதுமக்கள் சொல்வதை பாக்க முடிகிறது. அறிஞர் அண்ணாவே ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்றுதானே அறிவித்தார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

Leave a Reply