shadow

‘பேட்ட’யால் பின்வாங்குகிறதா ‘விஸ்வாசம்’?

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மற்றும் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் தேதியில் இருந்து பின்வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி, அஜித் ஆகிய இருவரது படங்களும் மிகப்பெரிய ஓப்பனிங் செய்யும் படங்கள் என்பதால் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானால் ஓப்பனிங் வசூல் இரண்டு படங்களுக்கும் குறைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் இந்த முடிவு என தெரிகிறது.

எனவே பொங்கல் திருநாளில் ‘பேட்ட’ படமும், விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 26 குடியரசு தினத்திலும் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பேட்ட, விஸ்வாசம், அஜித், ரஜினி

Leave a Reply