பேட்ட’யாக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 165வது படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது

இந்த படத்தின் டைட்டில் ‘பேட்ட’. இந்த மாஸ் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிவிட்டது.

ரஜினியின் முந்தைய படங்களான வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்ச்சலம், படையப்பா, பாபா, சிவாஜி, கோச்சடையான், லிங்கா, கபாலி, காலா வரிசையில் இந்த படத்தின் டைட்டிலும் ஒரே வார்த்தையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *