பெல் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனியர்களுக்கு வேலை

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கான்ட்ராக்ட் என்ஜினீயர் பணிகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இது ஒரு வருட தற்காலிகப் பணி.
காலியிடங்கள்: 26 (எலெக்ட்ரானிக்ஸ்-16, மெக்கானிக்கல்-10)
கல்வித்தகுதி: எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன், மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25க்குள்
உதவித்தொகை: ரூ.23000/ மாதம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.1.2018
விவரங்களுக்கு: http://bghr-recruitment.com/Default.aspx?recid=180

எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி என்ஜினீயர்களுக்கு வேலை

ராஷ்ட்ரீயா இஸ்பாட் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். கேட் 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
காலியிடங்கள்: 72 (எலெக்ட்ரிக்கல்-19, மெக்கானிக்கல்-38, மெட்டலர்ஜி-15)
பயிற்சியின் போது சம்பளம்: ரூ.24900-50500/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.2.2018
விவரங்களுக்கு: https://www.vizagsteel.com/code/tenders/jobdocs/21860GATE%20Advertisement.pdf

இந்திய உள்துறை அமைச்சகத்தில் 335 காலியிடங்கள்

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சஷாஸ்த்ரா சீமா பால் பிரிவில் இன்ஸ்பெக்டர், டெப்டி இன்ஸ்பெக்டர், டெப்டி கமாண்டன்ட், சப்-இன்ஸ்பெக்டர், ஹெட்-கான்ஸ்டெபிள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
கல்வித்தகுதி, வயது போன்ற விவரங்களுக்கு: https://drive.google.com/open?id=1lfNN08YOU6NRDJEw6z1ebqI7SPexgoVo
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.3.2018
மேலும் விவரங்களுக்கு: www.ssb.nic.in

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

இந்திய அரசின் கீழ் நொய்டாவில் இயங்கி வரும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: உதவி மேலாளர் (10 காலியிடங்கள்)
கல்வித்தகுதி: ஜெனரல்/ பெர்சுனல் மேனேஜ்மெண்ட் பிரிவில் முதுகலைப் படிப்பு அல்லது பைனான்ஸ் பிரிவில் எம்.பி.ஏ அல்லது எம்.காம் அல்லது கம்ப்யூட்டர்/ இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் எம்.எஸ்.சி அல்லது எம்.சி.ஏ படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (6 காலியிடங்கள்)
கல்வித்தகுதி: டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டத்துடன் அலுவலக உதவியாளர் பணியில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.1.2018
மேலும் விவரங்களுக்கு: http://www.fddiindia.com/jobs-new/jobs_fddi_plsdp–17012018.html

தனியார் வேலைவாய்ப்புகள்
30 வருட பாரம்பரிய எஸ்.கே.எம் நிறுவனத்தில் நேர்முக உதவியாளர் பணி
ஈரோட்டில் இயங்கி வரும் 30 வருட பாரம்பரிய நிறுவனமான ஸ்ரீ எஸ்.கே.எம் நிறுவனத்தில் நேர்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு டிகிரியுடன் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமை இருக்க வேண்டும். ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம்: ரூ.20000-25000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.1.2018
விவரங்களுக்கு : KISHORE, HR ASSISTANT – 7373095959

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *