shadow

பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளத்தில் கட்: அசாம் முதல்வர்

வயதான பெற்றோர்களை உரிய முறையில் கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25% கட் செய்யப்படும் என அசாம் முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விரைவில் சட்டம் அமலில் வரப்போவதாகவும் வரும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி இந்த சட்டம் அசாம் மாநிலத்தில் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் அசாம் அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து அசாம் மாநில அமைச்சர் ஹிமானந்த் பிஸ்வா சர்மா கூறுகையில், ‘வசதியில்லாத பெற்றோரை காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவரின் கடமை. அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர வேண்டும். அவ்வாறு தவரும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து பெற்றோருக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோருக்கும் இந்த உத்தரவு பொருந்தம்’’ என்றார்.

நாட்டிலேயே முதன்முறையாக அசாம் மாநில அரசு இந்த சட்டத்தை கொண்டுவர உள்ளது குறிப்பிடத்க்கது.

Leave a Reply