பெரு நாட்டின் பிரதமர் ஆனார் பிரபல நடிகர்!

நடிகர் நாடாள்வது தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார் என்பவர் பெரு நாட்டின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார். அவருக்கு உலகம் முழுவதிலும் உள்ள திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பெரு நாட்டின் பிரதமராக இருந்த சீசர் வில்லனுயேவா கடந்த வாரம் ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக அந்நாட்டின் ஆளுங்கட்சி எம்பிக்கள் நடிகர் சால்வடார் டெல் சோலார் என்பவரை புதிய பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்தனர். இதனையடுத்து நேற்று சால்வடார் டெல் சோலார் பிரதமராக பதவியேற்றார்

புதிய பிரதமராக பதவியேற்ற சால்வடார் டெல் சோலார், தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள அழகிய நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் அமேசான் மழைக்காடுகள் மற்றும் பசுமை நிறைந்த மச்சுபிச்சு மலைத்தொடர்கள் இருப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *