பெரியாருக்கு ஜாதி அடையாளமா? பொங்கிய ஸ்டாலின்

நேற்று நடந்த குரூப் 2 வினாத்தாள் கேள்வி ஒன்றில்  கேட்கப்பட்ட கேள்வியில் பெரியாரின் பெயர் ‘இ.வெ.ராமசாமி நாயக்கர்’ என எழுத்துப் பிழையுடன், சாதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்வர்கள் புகார் கூறினர் . இதற்கு பல அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:

குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம் என்றும் இதற்கு காரணமானவர்களை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பெரியார் நடத்திய விடுதலை பத்திரிக்கையில் ராமசாமி நாயக்கர் என்று தான் உள்ளது என்றும் சமீபத்தில் சந்திரபாபு ‘நாயுடு’ என்று ஜாதி பெயருடன் ஆந்திர முதல்வரை ஸ்டாலின் புகழ்ந்தது ஏன் என்றும் நெட்டிசென்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *