ராஜினாமா செய்தார் பிரதமர்!

லெபனானில் உள்ள பெய்ரூட் நகரில் நடந்த பயங்கர வெடிவிபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் ஹசன் டெய்ப் அவர்களும் ராஜினாமா செய்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர சத்தத்துடன் வெடித்தது

இதனால் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகியது மட்டுமின்றி 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த வெடிவிபத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என்ரு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்நாட்டு அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்த நிலையில் இன்று அந்நாட்டு பிரதமர் ஹசன் டெய்ப் ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply