பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது: மீடூ குறித்து ரஜினிகாந்த் கருத்து

கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீது மீடூ குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவும், மீடூவுக்கு ஆதரவாகவும் இந்த கருத்து உள்ளது.

இந்த நிலையில் இன்று பேட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினியிடம் ‘மீடூ’ குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். மீடூ குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காத ரஜினிகாந்த் முதல்முறையாக இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

அவர் மீடூ குறித்து கூறியபோது, ”மீடூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது என்று தெரிவித்தார். மீடு குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்து, ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *