shadow

பெண்களை சபரிமலைக்க்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர்: கேரள அரசு திட்டம்

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும், ஐயப்ப பக்தர்கள் என்ற போர்வையில் உள்ள ஒருசிலர் பெண்களை சன்னிதானத்திற்குள் செல்ல அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பாதையிலேயே பெண்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் சபரிமலையில் முன்பதிவு செய்துள்ள பெண் பக்தர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது. பெண் பக்தர்களை மலைக்கு அழைத்துச் செல்ல கேதர்நாத், வைஷ்ணவதேவி கோவில்களில் பயன்படுத்தப்படுவதைப் போல் , ஹெலிகாப்டர்களை இயக்க உள்ளதாக கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டலம் மகரவிளக்குப் பூஜைக்காக வரும் 17ம் தேதி முதல் 41 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ள நிலையில் இனி பெண்கள் பயமின்றி ஹெலிகாப்டரில் சபரிமலைக்குக் செல்லலாம்

 

Leave a Reply