பெண்களை கவர்வதற்கு சில டிப்ஸ்….
lovers
உண்மையான காதல் என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதிலும் ஒரு நல்ல பிகரை மடக்க வேண்டும் என்றால் மிகவும் கடினமானது.

ஆனால் அவர்களை மடக்குவது என்பது அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றும் இல்லை.

பொதுவாக பெண்களுக்கு ஆண்கள் எப்போதும் சந்தோஷமாக, கிண்டல் அடித்துக் கொண்டு, தேவையில்லாமல் கோபப்படாமல் இருந்தால் மிகவும் பிடிக்கும்.

மேலும் பார்க்க ஒரு டீசண்ட் லுக்கில் இருந்தால், பெரும்பாலான பெண்கள் மடங்கிவிடுவார்கள். அதிலும் சூப்பர் டிரஸ்ஸிங் சென்ஸோடு இருந்தாலே, விரைவில் கவரலாம்.

சில பெண்களுக்கு இளகிய மனம் என்பதால் அவர்களுக்கு சேவை என்பது மிகவும் பிடிக்கும். அவர்கள் பார்க்கும் போது ஏதேனும் ஒரு சமூக சேவை செயலை செய்தால் அவர்களை ஓரளவு கவரலாம்.

உதாரணமாக பழைய ஸ்டைலான ஏதேனும் முதியவரை அல்லது பாட்டியை ரோட்டை பத்திரமாக கடந்து சென்று விடுவது. என்ன பண்ணுறது, நம்ம பொண்ணுங்க இன்னும் இப்படி இருக்காங்கப்பா.

நீங்கள் காதல் செய்ய நினைக்கும் பெண் எங்காவது வெளியே ஷாப்பிங் அல்லது பஸ்ஸில் செல்லும் போது, அவர்களை யாராவது பயங்கரமாக கிண்டல் செய்து, அதனால் அவர்கள் வருத்தப்படும் போது, படத்தில் வரும் ஹீரோ போல வந்து தட்டிக் கேட்டால் போதும், உங்களிடம் பேசாமல் இருக்கும் பெண் கூட உங்களை அழைத்து, நன்றி சொல்லி, காப்பி சாப்பிட போலாமா என்று கூட கேட்க வாய்ப்பு உள்ளது. என்ன செய்வது நல்ல பிகர் வேண்டுமென்றால் ஒருசில சர்க்கஸ் செய்து தானே ஆக வேண்டும்…!!!

உங்களிடம் பழகி கொண்டிருக்கும் பெண்ணை விரும்புகிறீர்கள் என்றால், அவர்களுடன் வெளியே செல்லும் போது அவர்களை எந்த ஒரு செலவும் செய்யவிடாமல், அனைத்து செலவுகளையுமே நீங்களே ஏற்றுக் கொண்டால், அவர்களின் மனதில் “நம் மீது அவ்வளவு அக்கரையா?” என்று ஒரு வித அன்பு உங்கள் மேல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிறைய பெண்களுக்கு பைக் அல்லது கார் டிரைவிங் என்பது மிகவும் பிடிக்கும். அதன் மேல் அவர்கள் பைத்தியமாக கூட இருப்பார்கள்.

ஆகவே அத்தகையவர்கள் முன் சூப்பராக ஒருவித கெத்தோடு, வண்டியை ஓட்டிக் காட்டுங்கள். இதனால் அவர்களின் மனதில் ஒரு வித வித்தியாசமான இடத்தில் இருப்பீர்கள்.

முக்கியமாக அனைத்து பெண்களுக்கும், தன்னை எதிர்த்து போட்டியாக இருக்கும் ஆண்கள் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கும்.

அதிலும் அவர்கள் பங்கேற்கும் எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் போட்டியாக இருந்தால், பின் அவர்கள் மனதில், “என்னை தோற்கடிக்க, இவனால் மட்டும் தான் முடியும்” என்ற ஒரு எண்ணம் தோன்றும். பின் என்ன, அவர்கள் தான் உங்களை மடக்க யோசிக்க வேண்டும்.

மேற்கூறியவாறெல்லாம் செய்தால் பெண்களை ஈஸியாக கவரலாம். முக்கியமாக அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் எதுவும் செய்ய வேண்டாம். பின் அடி தான் விழும்.

ஆகவே அவர்களைப் பற்றி முதலில் தெரிந்து கொண்டு ஸ்டார்ட் பண்ணுங்க… அப்புறம் என்ன, ஒரே குஷி தான்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *