பெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது? அமைச்சர் மணிகண்டன்

சமீபத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கான ஆப் ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த செயலிக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் மணிகண்டன் கடும் விமர்சனம் செய்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:

சின்ன பிரச்சனையை கூட சமாளிக்க தெரியாமல் வேறு நாட்டிற்கு ஓடிவிடுவேன் என சொன்ன சப்பாணி நடிகருக்கு பெண்களுக்கான ஆப் வெளியிட என்ன தகுதி இருக்கிறது.

ஒரு ரூபாய் சம்பளம் பெற்றவர் தமிழக கஜானாவை காலிசெய்துவிட்டார் என ஜெயலலிதாவை பற்றி சொல்லவும் அவருக்கு தகுதி இல்லை

இவ்வாறு அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *