shadow

பெட்ரோல் விலை பெட்ரோல் பங்கைப் பொறுத்து மாறுமா?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து மாதம் ஒரு தடவையும் பின்னர் 15 நாட்களுக்கு ஒருமுறையில் பெட்ரோல், டீசலில் விலைமாற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை 1 முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு பங்கிற்கும் மாறுபாடான விலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், ஜெட் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடலாம். அதுமட்டுமின்றி, ஒரே நகரத்தில் உள்ள பெட்ரோல் பங்கிலும் கூட அந்த பெட்ரோல் நிறுவனத்தைப் பொறுத்து விலை மாறுபடலாம்.

வாடிக்கையாளர்கள், பெட்ரோல் விலையை பெட்ரோல் பங்கிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிந்துகொள்ள எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply