shadow

பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவிக்கு ரகுராம் ராஜன் பெயர் பரிந்துரை

சமீபத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களுக்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவி தேடி வரும் வாய்ப்பு உள்ளது. இந்த பதவிக்கான பரிந்துரையில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

கடத 2013 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றிய ரகுராம் ராஜன், ஓய்வுக்கு பின்னர் எழுதிய புத்தகம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிகையின் பின்விளைவுகள் பற்றி எச்சரித்ததாகவும், ஆனால் அவர் தனது எச்சரிக்கையையும் மீறி அந்த நடவடிக்கையை அமல்படுத்தியதாகவும் குறிப்பிட்டது அனைவரது கவனத்தையும் பெற்றது.

மேலும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சிறப்பாக செயல்பட்ட போது உலக அளவில் அவர் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில், அமெரிக்க அரசின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவிக்கு ரகுராம் ராஜனின் பெயர் வலுவாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply