பூமியை போன்று இரண்டு உலகங்களை கண்டுபிடித்த நாசா

பூமியை போல் வேற்றுக்கிரகங்கள் அண்டத்தில் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய அமெரிக்காவின் நாசா கெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் ஏவியது. இந்த விண்வெளி சாதனம் பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அவற்றில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை ‘சிக்னஸ்’ நட்சத்திர கூட்டத்திற்கு அருகே இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெப்லர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள நட்சத்திரங்களில் ஒருசில நட்சத்திரங்கள் பூமியிலிருந்து நூறு முதல் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பவை என்பதால் இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை இந்த விண்வெளி தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

அதேபோல் பூமியைப் போன்ற கிரகங்களை அண்டச் சராசரத்தில் கண்டுபிடிப்பது என்பது இந்த கெப்லர் தொலைநோக்கி எளியது என்றாலும் வானியல் வல்லுநர்கள் இந்தக் கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பூமியிலிருந்து 60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும், இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவால் அனுப்பப்பட்டுள்ள டிரான்ஸ்டிங் எக்சோப்லாநெட் செயற்கைகோள் மூலமாகவே இந்தக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ரெட்டார்ஃப் நட்சத்திரத்திற்கு அருகில் இரண்டாவது வேற்றுலகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கிரகம் பூமிக்கு ஒப்பிடக்கூடியது ஆனால் சற்று பெரியது என்றும், அதன் நட்சத்திரத்தைச் சுற்றி மிகக் குறைவான சுற்றுப்பாதைக் காலமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *