புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் போராடி தமிழ் தலைவாஸ் தோல்வி

கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த ஒரு போட்டியில் தெலுங்கு டைட்டான்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது.

இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது. தமிழ் தலைவாஸ் அணி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி மாறி மாறி அதிக புள்ளிகளை எடுத்து வந்த நிலையில் கடைசி கட்டத்தில் தெலுங்கு டைட்டான்ஸ் அணி சிறப்பாக விளையாடியதால் அந்த அணி 33-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் தலைவாஸ் அணிக்கு இரண்டாவது தோல்வி கிடைத்தது. இருப்பினும் பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது

அதேபோல் நேற்று நடந்த இன்னொரு போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் தலா 32 புள்ளிகள் எடுத்ததால் போட்டி டிரா ஆனது.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *