புயல் ஆபத்து நீங்கியதால் ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடக்கம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ‘கஜா’ புயல் காரணமாக ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவானில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாயவுள்ள ஜி எஸ் எல் வி மாக் 3 என்ற ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால் ஆந்திராவுக்கு புயல் ஆபத்து இல்லை என்றும், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி ராக்கெட் ஏவும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என இஸ்ரோ அறிவித்திருந்தது.

இதனையடுத்து ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. ஜி எஸ் எல் வி மாக் 3 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் சற்றுமுன் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 25.38 மணி நேர கவுன்ட்டவுன் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவானில் உள்ள ஏவுதளத்தில் தொடங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *