புதுவை பல்கலை நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 7, 8, மற்றும் 9 அகைய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் www.pondiuni.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக 41,160 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பித்த அனைவரும் இந்த அறிவிப்பின்படி ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து நுழைவுத்தேர்வன்று தவறாமல் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

 

Leave a Reply