புதிய 2000 ரூபாய்.. நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 14 விஷயங்கள்…!

2கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. பழைய நோட்டுக்குப் பதிலாகப் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று காலை முதலே வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய்களை கொடுத்துவிட்டு, புத்தம் புதிய பளபளக்கும் நோட்டுகளை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். புதிய 2000 ரூபாய் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் பல புதிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. வங்கிகளில் புதிய நோட்டுகளை பெறுவதற்கு முன்பு, புதிய 2000 ரூபாயை பற்றி பொதுமக்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய 14 தகவல்கள் கீழே..

1) புதிய 2000 ரூபாய் நோட்டு 166 X 66 மி.மீ அளவில் உள்ளது. இது பழைய 1000 ரூபாய் நோட்டை விடச் சற்று சிறிய அளவில் இருக்கிறது. பழைய 1000 ரூபாய் நோட்டு 177 X 73 மி.மீ அளவில் இருந்தது.

2) இப்போது வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டு கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது.

2000 நோட்டின் முன் பகுதி…

2) புதிய 2,000 நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி உருவம், அசோகத் தூண் சின்னம், கோடுகள் மற்றும் அடையாள குறிகள் இடம்பெற்றுள்ளன. இது பழைய 500,1000 ரூபாய் நோட்டிலும் இடம்பெற்றிருந்தது.

3) கண்பார்வையற்றோர்க்கு வசதியாக நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் ஏழு கோடுகளும், வலதுபுறத்தில் கிடைமட்ட செவ்வகமாக ரூபாய் 2000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

4) மகாத்மா காந்தியின் புகைப்படம் நோட்டின் வலதுபுறத்தில் இருந்து மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

5) பணத்தின் மதிப்பான இரண்டாயிரத்தின் நியூமரிக்கல் எண் நோட்டின் வலது கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இடது பக்கத்தில் தேவநாகிரி மொழியிலும் இடம்பெற்றுள்ளது.

6) ரூபாய் நோட்டில் அச்சடிக்கப்படும் பாதுகாப்பு இழை பச்சை கலரில் இருந்து நீலக்கலருக்கு மாறியுள்ளது.

7) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி மொழியுடன் அவரது கையொப்பம் வலதுபக்கம் இடம்பெற்றுள்ளது. பழைய நோட்டுகளில் கிழ்பகுதிகளில் இது இருக்கும். புதிய நோட்டில் செங்குத்தாக இது இடம் பெற்றுள்ளது.

8) ரூபாய் நோட்டின் எண் வலது கீழ் பகுதியில் உள்ளது. எண்கள் சிறிதிலிருந்து பெரிதாக அதிகரிக்கிறது.

9) மையப்பகுதியில் உள்ள காந்தி புகைப்படத்தின் அருகில் மிகச் சிறிய எழுத்துக்களில் “RBI” மற்றும் “2000” ஆகிய எழுத்துகள் உள்ளன.

10) மகாத்மா காந்தி புகைப்படம் மற்றும் பணத்தின் மதிப்பான ரூபாய் 2000க்கான வாட்டர் மார்க்கும் அச்சிடப்பட்டுள்ளது.

2000 நோட்டின் பின்பகுதி..

11) நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு இடது பக்கம் இருக்கிறது..

12) ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் குறியீடு மற்றும் பிரசார வாக்கியம் உள்ளது.

13) இரண்டாயிரம் ரூபாய் என்ற சொல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் நோட்டின் நடுவே அச்சடிக்கப்பட்டுள்ளது.

14) மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் புதிய 2000 ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *