பீர் பாட்டிலுடன் விஷால்: அயோக்யா போஸ்டருக்கு பாமக எதிர்ப்பு

சிகரெட் மற்றும் மது அருந்தும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெற்றால் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி தற்போது கையில் பீர் பாட்டிலுடன் விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் அவர்கள். தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பாமக தலைவரின் இந்த எதிர்ப்பை அடுத்து நடிகர் விஷால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை திரும்ப பெருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *