shadow

பீஜித்தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி வருமா?

பசிபிக் கடற்பகுதியில் அமைந்த பிஜி தீவு கூட்டங்களில் ஒன்றான எண்டோய் தீவின் வடகிழக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் சுனாமி வர வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவியது

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 8.2 ஆக பதிவாகி உள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் கடலுக்கு அடியில் 560 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று புவியியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பிஜி தீவு பகுதிகளில் ரிக்டர் மதிப்பில் 4க்கு மேற்பட்ட அளவிலான அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Leave a Reply