பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு

பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து கங்குலிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் சற்றுமுன் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் கங்குலி செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘`இந்த காலகட்டத்தில் பிசிசிஐ-யின் தலைவராக நான் நியமிக்கப்பட வாய்ப்புகள் உருவாகி இருப்பதை மகிழ்ச்சியாகப் பார்க்கிறேன். காரணம், பிசிசிஐ-யின் நிலை தற்போது மோசமாக இருக்கிறது. இதைச் சரி செய்வதற்கு, எனக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

போட்டியே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, போட்டிபோட்டு தேர்வானாலும் சரி, இந்தப் பதவி மிகப் பெரிய பொறுப்பு. காரணம், உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம்தான் பெரியது. இந்தியாதான் பவர்ஹவுஸ். அதனால் இந்தப் பயணம் நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும்” என்றார்.

Leave a Reply