shadow

பி.இ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு : முக்கிய அறிவிப்பு வெளியீடு

பி.இ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கலந்தாய்வில் கலந்து கொள்ள வெளியூரில் இருந்து வரும் பெண் விண்ணப்பதாருடன் தாயார் அல்லது பாதுகாவலார் பெண்ணாக இருப்பின் காலை 7.00 மணி கலந்தாய்விற்கு வருபவார்கள் விரும்பினால் முதல் நாள் இரவு தங்கும் வசதியும் மற்றும் மாலை 7.00 மணி கலந்தாய்வில் கலந்து கொள்ள வருபவர்கள் கலந்தாய்வு முடிவுற்றபின்தங்களது சொந்த ஊருக்குகு இரவே செல்ல இயலாதவர்கள் விரும்பினால் இரவு அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கும் வசதி மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரே மாதிரி பெயர் கொண்ட கல்லூரிகள் பல உள்ளதால் மேற்படி கல்லூரியை தரிவு செய்யுமுன் கல்லூரி குறியீட்டு எண், விலாசம் இவற்றை சாரிபார்த்த பின் பாடப்பிரிவு மற்றும் கல்லூரியை தெரிவு செய்யவும். மேற்படி கல்லூரிகள் பற்றிய விவரங்கள் (விடுதி போன்றவை) அறிய அண்ணா பல்கலைக்கழக இணையதாளத்தை பார்க்கவும்.

கல்லூரி மற்றும் பாடப்பிரிவையோ ஒரு முறை தெரிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே விண்ணப்பதார். மேற்கூறியவற்றை கவனத்தில் கொண்டு கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, இரண்டு மணி (120 நிமிடங்கள்) முன்பாக கலந்தாய்வு அரங்கிற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply