பி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கையில் இடங்கள் குறைப்பு

பி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வரும் கல்வியாண்டு முதல் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 10 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதற்கு மேல் விண்ணப்பிக்கப்பட்டால் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் நிரப்பப்படாத இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி இரண்டாம் ஆண்டு படிப்பதற்கான கலந்தாய்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply