பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய வெங்கட்பிரபு?

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு கோலிவுட் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் வெங்கட்பிரபுவும் தனது டுவிட்டரில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இன்று வெளியாகியுள்ள வெங்கட்பிரபுவின் ‘RK நகர்’ திரைப்படத்தில் ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்ருவாங்களா? எம்ஜிஆரா நீ? என்ற வசனம் உள்ளது. இந்த வசனம் அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்களை குறிப்பாக கமல்ஹாசனை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்தும் தெரிவித்துவிட்டு, அவருடைய அரசியல் வருகைக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்கின்றாரா வெங்கட்பிரபு? அதாவது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறாரா? என்று டுவிட்டர் பயனாளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *