shadow

பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்: தயார் நிலையில் மாணவர்கள்

2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை அதாவது மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும் பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) 1,144 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

சென்னையில் மட்டும் 408 பள்ளிகளில் இருந்து 158 தேர்வு மையங்களில் மாணவிகள் 26 ஆயிரத்து 285 பேரும், மாணவர்கள் 23 ஆயிரத்து 134 பேரும் என மொத்தம் 49 ஆயிரத்து 419 பேர் எழுத உள்ளனர். புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 408 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு என 2 ஆயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 150 புதிய தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.

Leave a Reply