பிளஸ் 2 துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்

studentபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தேர்வர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தோர், அதனை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

விண்ணப்பத்தாரர்கள் சனிக்கிழமை (ஆக. 6) பிற்பகல் 2 மணி முதல் sc​a‌n.‌t‌n‌d‌g‌e.‌i‌n​ என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவு எண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து விண்ணப்பம் செய்த பாடங்களுக்குரிய விடைத்தாளர்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதைத் தொடர்ந்து, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதே இணையதள முகவரியில் A‌p‌p‌l‌i​c​a‌t‌i‌o‌n​ ‌f‌o‌r​ R‌e‌t‌o‌t​a‌l‌l‌i‌n‌g R‌e‌v​a‌l‌u​a‌t‌i‌o‌nஎன்ற தலைப்பினை C‌l‌i​c‌k​ செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து வரும் 9,10-ஆம் தேதிகளில் மாலை 5 மணிக்குள் அந்தந்தப் பகுதி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோன்று மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தையும் குறிப்பிட்ட அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் எனவும், மண்டலத் தேர்வு துணை இயக்குநர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *