பில்லி, சூன்யங்களை போக்க என்ன வகை வழிபாடு செய்ய வேண்டும்?

சரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சம் என்பதால் 11 நெய்தீபம் ஏற்றி வணங்குவது விஷேசம். உலகைகாக்கும் ஈசனின் ஒரு வடிவமே சரபேஸ்வரர் ஆவார்.

சரபேசர் : 1. சிவன் , 2. விஷ்ணு , 3. காளி(பிரத்யங்காரா தேவி), 4. துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம்தான் சரபேசர்.

எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.

இரணியனது வரத்தின் படியே,அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரணியனை வதம் செய்தார்.

அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார்.நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.

பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் சிவன் நடுக்கம்தீர்த்த பெருமான் என்றானார். சரபம் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள்.

பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் “சிம்மக்ன மூர்த்தி”, “சிம்ஹாரி”, நரசிம்ம சம்ஹாரர்” என்றும் அழைக்கப்படுகின்றது.

பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபர்

சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள்.

பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள்.

இந்திரனே நகங்கள். காலனே தொடைகள்.

சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும்.

தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 100 அல்லது 1000 முறை ஜெபித்து, ராகு காலத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும். மலட்டுத் தன்மை நீங்கும்.

ராகு காலம் நீடிக்கும் 1 மணி நேர மும் சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது பாம்பு களிடமிருந்து காத்திடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *