பிரபல ஹீரோவுக்காக இணைந்த யுவன் – தமன்!

இரண்டு இசையமைப்பாளர்கள் ஒரே படத்தில் பணிபுரிவது என்பது தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர்களான யுவன்ஷங்கர் ராஜா மற்றும் தமன் ஆகியோர் ஒரு படத்தில் பணிபுரியாவுள்ளனர்.

ஆம், தமன் இசையமைத்து வரும் ‘அருவம்’ என்ற படத்தில் யுவன்ஷங்கர் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நடந்ததாகவும், இந்த பாடல் ஒலிப்பதிவின்போது இரு இசையமைப்பாளர்களும் ஜாலியாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் ‘அருவம் ‘படத்தில் அவருக்கு ஜோடியாக கேதரின் தெரசா நடித்து வருகிறார். இந்த படத்தை சாய்சேகர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக யுவன் பாடிய பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக ரிலீஸ் ஆகவுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *