பிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்

பிரபல கவர்ச்சி நடிகை சாய்ராகான் திடீரென மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குனர் ரூபேஷ் பால் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காமசூத்ரா. இந்த படத்தில் சாய்ராகான் ஒரு முக்கிய கவர்ச்சி கேரக்டரில் நடித்திருந்தார். அவருடைய நடிப்பிற்கு பாராட்டு குவிந்தாலும், அதன்பின் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்த நிலையில் நடிகை சாய்ராகான் திடீரென மாரடைப்பில் மரணம் அடைந்தார். சாய்ராகான் மரணம் குறித்து இயக்குனர் ரூபேஷ் கூறுகையில், ‘காமசூத்ரா படத்தில் நடிக்க அவர் முதலில் சம்மதிக்கவில்லை. அவரை இந்த படத்தில் நடிக்க சம்மதிக்க வைக்க கடினமாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதும் கேரக்டரை உணர்ந்து நடித்தார். இந்த படத்தில் அவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று கூறினார்

 

Leave a Reply