பிரபல இயக்குனர் கார் விபத்தில் சிக்கி காயம்

அஜித், சூர்யா, சிம்பு, சரத்குமார், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கவுதம் மேனன். இவர் தற்போது ஒரே நேரத்தில் தனுஷ் மற்றும் விக்ரம் இயக்கி வரும் படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை படப்பிடிப்பு பணி ஒன்றுக்காக காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவுதம் மேனன் சென்ற கார் சென்னை செம்மஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிப்பர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. அவருடைய கார் நொருங்கிய நிலையில் சிறு காயங்களுடன் கவுதம் மேனன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *