பிரபல இயக்குனருக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயலலிதா அண்ணன் மகன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஏற்கனவே பல இயக்குனர்கள் இயக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பிரபல இயக்குனர் விஜய் ’தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கி வருகிறார்

அதேபோல் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் ‘குவீன்’ என்ற பெயரில் வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார் இதுபோக பாரதிராஜா மற்றும் மேலும் ஒரு இயக்குனர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு உள்ளனர்

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் ’ஜெயலலிதா குறித்து தலைவி என்ற படத்தை இயக்கப் போவதாக இயக்குனர் விஜய் எங்களிடம் ஏற்கனவே முன் அனுமதி பெற்றிருந்தார். கௌதம் மேனனின் ’குவீன்’ என்ற வெப்சீரிஸ் யாரை வைத்து எடுக்கப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்

மேலும் எங்கள் அனுமதி இல்லாமல் ஜெயலலிதா குறித்து வெப்சீரீஸ் எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபக்கின் இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *