shadow

அஜித், விஜய் வாழ்த்து

அஜித் நடித்த ’கிரீடம், விஜய் நடித்த ’தலைவா’ மற்றும் மதராசப்பட்டணம், சைவம், லட்சுமி, தியா உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் தற்போது ‘தலைவி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் விஜய்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விஜய்யின் சகோதரர் நடிகர் உதயா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஆம், இயக்குனர் விஜய் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் என்று அவர் டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார். விஜய்க்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் அஜித், விஜய் போனில் வாழ்த்து கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இயக்குனர் விஜய் கடந்த 2014-ம் ஆண்டு நடிகை அமலாபாலை திருமணம் செய்தார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பின் 2019ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண்ணை விஜய் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *