shadow

பிரதமர் வேட்பாளர் யார்? காங்கிரஸின் குழப்பமான பதிலால் வாக்காளர்கள் அதிருப்தி

காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல்காந்திதான் பிரதமர் என்பதை உறுதியாக சொல்லாமல், பா.ஜனதாவை வீழ்த்த வலிமையான கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமர் யார் என்று தேர்தல் முடிவுகளுக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதால் பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக, எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியபோது, ‘ பா.ஜனதாவை வீழ்த்துவதற்கு வலிமையான கூட்டணி அவசியம் என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் உணர்ந்துள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளுடன் வலிமையான கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஒவ்வொரு மாநிலத்திலும், கருத்து ஒற்றுமை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டுவதுதான் எங்கள் இலக்கு.

இந்த பணி மூலம் கூட்டணியை முறையாக அமைத்து விட்டால், பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் தோற்கடித்து விடலாம்.

எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் யார் என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முடிவு செய்யப்படும். ஏனென்றால், தேர்தலுக்கு பிந்தைய நிலைமையை இப்போதே பேசினால், அது எதிர்விளைவுகளை உருவாக்குவதுடன், கூட்டணியில் பிளவை உண்டாக்கி விடும்.

Leave a Reply