பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

தினத்தந்தி நாளிதழின் பொன்விழாவில் கலந்து கொள்ளவும், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் திருமண விழாவில் கலந்து கொள்ளவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வரவுள்ளார். இதனையொட்டி இன்று சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து தினத்தந்தி பவள விழாவில் கலந்து கொள்ள காரில் செல்கிறார். அதன் பின்னர் 11.30 முதல் 12 மணிக்குள் ராஜா அண்ணாமலைபுரத்தில் திருமண விழாவிலும் கலந்துகொள்ள உள்ளார். இவ்விரண்டு விழாக்களையும் முடித்துக்கொண்டு பகல் 12.45 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிறகு தற்போது தான் பிரதமர் மோடி சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை வரும் மோடி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பாஜகவினர் தயார் நிலையில் உள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *