shadow

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு! காவிரி ஆணையம் குறித்து ஆலோசனை

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் முக்கியமாக காவிரி மேலாண்மை ஆணையம் உடனே செயல்பாட்டுக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்மேலாண்மை, குடிமராமத்து பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மதுரை காந்தி அருங்காட்சியகத்தை 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த வேண்டும். ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும்.

காவிரி ஒழுங்காற்றும் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகள் வளம் பெறவும், வேளாண் விற்பனை கூடங்களை மேம்படுத்தவும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply