shadow

பிரதமர் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்: கூட்டணி உறுதியாகிவிட்டதா?

அதிமுகவுடன் கூட்டணி என தேமுதிக இன்னும் அறிவிக்காத நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இன்னும் சற்று நேரத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறது என துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் முதல்வர், துணை முதல்வருடன் விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply