அதிர்ச்சித் தகவல்

பின்னணி பாடகி ஜானகி உடல்நிலை குறித்து கடந்த சில மணி நேரங்களாக வதந்திகள் சமூகவலைதளத்தில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் உட்பட பல மொழிகளில் பாடி வருபவர் பாடகி ஜானகி

அவரது உடல்நிலை குறித்து கடந்த சில மணி நேரமாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது

இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்த ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா தனது தாயார் நலமாக இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *