shadow

பிஜி முத்தையாவின் அடுத்த பட ஹீரோவாகும் யோகிபாபு!

பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பிஜி முத்தையா தற்போது யோகி பாபு நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காக்டெயில் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விஜய முருகன் என்ற இயக்குனர் இயக்க உள்ளார். சாய்பாஸ்கர் இசையமைக்கும் இந்த படத்திற்கு நவீன் ஒளிப்பதிவும் பாசில் படத்தொகுப்பும் பணியும் செய்ய உள்ளன

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதையடுத்து விரைவில் டீசரும் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

அஜித் விஜய் உள்பட பல நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடங்களில் கலக்கி வரும் யோகி பாபு, ஹீரோவாகவும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *