பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ரஜினி-கமல்! ஆச்சரிய தகவல்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ரஜினி-கமல்! ஆச்சரிய தகவல்

பிக்பாஸ் வீட்டில் ரஜினி உள்பட பல பிரபலங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் ‘பிக்பாஸ் வீடு சென்னை அருகேயுள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் செட் போடப்பட்டுள்ளது. இந்த செட் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டது

இந்த வீட்டை பார்த்து வந்த பத்திரிகையாளர்கள் கொடுத்த தகவலின்படி ‘பிக்பாஸ் வீட்டில் பலவிதமான ஓவியங்கள் கண்ணை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பேட்ட ஸ்டைலில் ஓவியமாக இருப்பதையும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் கமல்ஹாசனின் ஓவியம் ஒன்று அவர் நெற்றியில் விபூதியுடன் இருப்பது போல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் சைக்கிள், ரிக்சா, டிராக்டர் மாடல்களில் ஆங்காங்கே அலங்காரம் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிச்சன், லாரி வடிவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply