பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் முதல் விளம்பரம்

பிக்பாஸ், பிக்பாஸ் 2 ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் நல்ல பிரபலமாகிய நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிலையில் முதல் இரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் விளம்பர வீடியோவை சற்றுமுன் விஜய் டிவி தனது டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் வித்தியாசமான தோற்றம் அனைவரும் கவரும் வகையில் உள்ளது

Leave a Reply