Chennai Today News

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை அஞ்சலி

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை அஞ்சலி

கடந்த 90 நாட்களாக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் வாரத்துடன் நிறைவு பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் திடீர் விருந்தாளியாக நடிகை அஞ்சலி இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த தகவல் இன்றைய புரமோ வீடியோவில் இருந்து உறுதியாகியுள்ளது.

மேலும் அவர் ஒருசில மணி நேரங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்றும் அவர் நடித்துள்ள ‘பலூன்’ படத்தின் புரமோஷனுக்காகவே இந்த வீட்டிற்கு அவர் வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அஞ்சலியுடன் இந்த படத்தின் இயக்குனர் சினிஷூன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!