பிக்பாஸ் வீட்டிற்கு கமல் வராதது ஏன்?

பிக்பாஸ் வீட்டிற்கு விஜய் டிவியில் பணிபுரியும் கிட்டத்தட்ட அனைவரும் வந்துவிட்ட நிலையில் கமல் எப்போது வருவார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி, பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரியோ ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்த சீசனில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்‌ஷி, வனிதா, சேரன் ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், கவின், தர்ஷன் ஆகியோருக்கு மட்டும் இன்னும் சிறப்பு விருந்தினராக வரவில்லை

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு பலரும் வந்து செல்லும் நிலையில் கமல்ஹாசன் மட்டும் இதுவரை வீட்டிற்கு வராதது போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று அல்லது நாளை கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply