பிக்பாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் சாக்சி அகர்வால்!


பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்த சாக்ஸி, வனிதா-ஷெரின் ஆகியோர்களுக்கு இடையே நடந்த ஒரு பிரச்சனையின் போது ஷெரினை ஆறுதல் கூறும்போது ’குரைக்கும் நாய்கள்’ என்று கூறி இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில் அவர் ’மக்களை அவ்வாறு கூறவில்லை என்றும், ஷெரினுக்கு ஆறுதல்கூறும்போது தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும்….. எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தும் இருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது அறிக்கை பார்வையாளர்களை பொதுமைப்படுத்துவதாக இல்லை, ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கமல்ல, எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதி அளிக்கின்றேன்

உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு மற்றும் கருத்தை நான் மதிக்கின்றேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கின்றேன், நீங்கள் என் குடும்பத்தை போன்றவர்கள், அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து எனக்கு ஆதரவு அளிக்கவும்.

இவ்வாறு சாக்ஷி அகர்வால் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *