பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகின்: கமல் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் முகின் தான் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், விஜய் டிவி வட்டாரங்களிலும் செய்திகள் வெளியான நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே முகின் தான் வின்னர் என கமல் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதனையடுத்து முகின் வின்னர் என்பது 100% உண்மையாகிவிட்டது

பிக்பாஸ் சீசன் 3 வின்னராக முகின் தேர்வு செய்யப்பட்டது சரியான முடிவு என மக்களுக்கும் விஜய் டிவிக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்முறையாக மக்களின் வாக்குகளுக்கு மதிப்பு அளித்து வின்னர் பெயர் அறிவிக்கப்பட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

Leave a Reply