shadow

பிக்பாஸ் டேனியல் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவது தெரிந்ததே. ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ஒருபக்கம் சூப்பர் ஹிட் ஆக, இன்னொரு பக்கம் ஆரவ் ‘ராஜ பீமா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் ஜூலி, ‘அம்மன் தாயி, ‘அனிதா எம்பிபிஎஸ்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் 2 சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான டேனியல், ‘அறம்’ இயக்குனர் கோபிநயினார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஹீரோ ஜெய் என்றாலும் டேனியலுக்கு முக்கிய கேரக்டர் என்றும், இந்த படம் டேனியலில் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply