பிக்பாஸ் டேனியல் செய்த திடீர் பதிவுத்திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட டேனியல் வெளியேறிய அடுத்த நாளே தனது காதலி டெனிஷாவை திடீரென பதிவுத்திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் வெளியேறியவுடன் திருமணம் என்று அவர் அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தாலும், வெளியேறிய மறுநாளே திருமணம் செய்து கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மேலும் தனது குடும்ப சூழல் காரணமாக உடனடியாக பதிவுத்திருமணம் செய்ய வேண்டிய அவசியம் வந்துவிட்டதாகவும், தனது சூழ்நிலையை புரிந்து கொண்டு அனைவரும் தங்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்றும் டேனியல் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த திருமணம் குறித்த தகவல் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *