பிகில்: சென்னையில் ரூ.10 கோடி வசூல் செய்த 4வது படம்!

ஒருபக்கம் சென்னையில் உள்ள ஒருசில திரையரங்குகளில் பிகில் படத்திற்கு ஆடியன்ஸ் வராததால் காட்சிகள் ரத்து என்று கூறப்பட்டாலும், பிகில் படத்தின் சென்னை வசூல் பத்து கோடியை எட்டிவிட்டதாக மூவி டிராக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘சர்க்கார்’ ஆகிய படங்களை அடுத்து சென்னையில் ரூ.10 கோடி வசூல் செய்த விஜய்யின் 4வது படம் பிகில் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பிகில் படம் உலகம் முழுவதும் ரூ.215 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply